ADDED : டிச 01, 2013 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பு ஒருபோதும் 'வேண்டும்' என்று கேட்பதில்லை. அது எப்போதும் கொடுக்கவே செய்யும்.
* உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலனை எதிர்பார்க்காது. அன்பை விட அதிக பலம் வாய்ந்ததும், பணிவுடையதும் வேறு எதுவும் கிடையாது.
* பாவங்கள் எல்லாம் அந்தரங்கமாகவே செய்யப்படுகின்றன. நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்து விட்டால் அந்தக்கணமே பாவம் செய்வதை விட்டு விடுவோம்.
* ரகசியமாகச் செய்யும் அனைத்துமே பாவம் தான். கடவுளின் கண்ணில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது.
* கணவனுக்கும் மனைவிக்கும் இடையே களங்கமற்ற நிஜமான அன்பு இருக்க வேண்டும். வேறெந்த அன்பை காட்டிலும் இதுவே கடவுளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல வல்லது.
- காந்திஜி